1.கழிவறையில் திரவ சோப்புகைத்துடைக்க டிஸ்யு பேப்பர்இருக்கை எண் காட்டும்நவீன விளக்குசெல்பேசி,மடிக்கணிணிசார்ஜ் செய்யும் வசதிதண்ணீர் பாட்டில்,சிற்றுண்டிஎல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டிஅருகாமை மனிதர்களும் அஃறினையாய் இறுக்கத்தில்ஒளிந்து முகம் காட்டும் குழந்தைஉயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு *************************************** 2.புது வருடம் எப்போதும் போல் கடலுக்குள்தலை மறைத்த சூரியன்.ஏராள வெளிச்சத்தைஇனம் புரியாது பார்க்கும் சந்திரன்மருண்ட கண்களுடன்ஒடுங்கின பறவைகள்பழக்கப் படாத இரைச்சலில்சற்றுப் பயத்துடன் […]
Continue reading »Category: கவிதை
நடைமேடை எண்-2
நீண்ட பெருமூச்சுடன் கடக்கும்ஒரு பழைய எஞ்சின்பளிச்சிடும் கேமரா வெளிச்சத்திற்குப் பின்இயல்புக்குத் திரும்பும் மனித முகங்கள்சரக்கு ரயிலென்று தெரிந்ததும்ஏமாற்ற முகப் பிச்சைக்காரன்ரயில் புறப்படும் நேரத்தில்விலகுவதற்குள் இறுகப் பற்றப்படும் புதுத் தம்பதிக் கைகள்அடுத்த ரயிலுக்காக அம்மாவுடன்காத்திருக்கும் குழந்தை விடும்பபிள்கம் முட்டையில்திரும்பத் திரும்ப உடையும்என் உலகம்
Continue reading »வெடிகுண்டு மிரட்டல்
அனாமதேயத் தொலைக்குரல் ஒன்றுஅவசரமாய் நிறுத்தியதுபுறப்படும் என் ரயிலை.தொடையுயர மோப்பநாய் முகர்ந்து பார்க்கவே பிறவியெடுத்ததாய்ஏஸி, ஸ்லீப்பர் எல்லாமும் ஏறிஇருக்கையின் கீழ், பயணியர் பைகள்எல்லா இடத்திலும் அதன் மூச்சும்,வழியும் எச்சிலும்எதுவும் இல்லை என்று உற்சாக விசிலடிக்கப்படதேடியது கிடைக்காமல்சோகமாய் அமர்ந்தது ப்ளாக்கி..
Continue reading »