சாதா குழந்தை to சூப்பர் குழந்தை – 2

indian babyசாதா குழந்தை to சூப்பர் குழந்தை என்னும் இந்தத் தொடர், குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் நம் அனைவருக்கும், மற்றும் வருங்காலத்தில் குழந்தைகளை வளர்க்க இருக்கும் நாளைய பெற்றோர்களுக்கும் மிக அவசியமான ஒன்று.

குழந்தைகளைப் பற்றி, கலீல் கிப்ரான் என்ன சொல்கிறார் என்பதிலிருந்து இந்தத் தொடரைத் தொடங்குவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you, yet they belong not to you.
You may give them your love but not your thoughts.
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them, but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.
You are the bows from which your children as living arrows are sent forth.
The archer sees the mark upon the path of the infinite, and He bends you with His might that His arrows may go swift and far.
Let your bending in the archer’s hand be for gladness;
For even as he loves the arrow that flies, so He loves also the bow that is stable.
by Kahlil Gibran

என் அக்கா மகள் வித்யா மிகச் சிறிய வயதிலேயே படு சூட்டிகை.இரண்டு, மூன்று வயதிலேயே வயதுக்கு மீறின அறிவும்,கிரகிக்கும் திறனும் கொண்டிருந்தாள்.மிகப் பெரிய புத்திசாலியாக, கல்வி, கலைகளில் அரசியாக வலம் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு,அவள் சுமாராகப் படித்து மிக சாதாரண பெண்ணாக வளர்ந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.அதற்கு அவள் காரணம் அல்ல. வித்யா மட்டுமல்ல-உங்களுக்குத் தெரிந்து நிறைய சூட்டிகையான குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகையில், தான் தேர்ந்தெடுக்கும் துறையில் வல்லுநராக, தான் மிக விரும்பும் ஒரு கலையில் தனித் தன்மையுடன் பிரகாசிக்க இயலாத மிகவும் சாதாரணமானவராகப் பரிணமித்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.
அதற்குக் காரணம் அக்குழந்தைகள் அல்ல- அவர்களை, திறனுடன் எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் இருக்கும் நாம்தான்.

இது எப்படி என்றால்,
ஒரு குழந்தையின் ஐந்து வயது முடிவதற்குள்ளாகவே,ஏறக்குறைய அதன் தொண்ணூறு சதவீத மூளை வளர்ச்சி முடிந்து விடுகிறது.
,பிறக்கையிலேயே பல லட்ச ந்யூரான் (நரம்பு) செல்களுடன் பிறக்கிற குழந்தையின் ஒவ்வொரு ந்யூரான செல்லும் இன்னொன்றுடன் ஒயர்களைப் போல இணைக்கப் பட்டுள்ளன.குழந்தைகள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு புதிய விஷயமும் இந்த ந்யூரான் இணைப்புகளில் புதுவிதமான வழித் தடத்தை உருவாக்குகிறது. நம் நோக்கம், குழந்தையின் மூளையில் இருக்கும் ந்யூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல- ஆனால் இந்த செல்களின் இணைப்புத்திறனை பலப் படுத்துவதே. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட ந்யூரான் இணைப்புத் தடத்தை பலப்படுத்தி, குழந்தைக்குக் கற்றலை சுலபமாக்குகிறது.
எந்தப் பெற்றோர்கள் தம் குழந்தையிடம் அதிகமாகப் பேசுகிறோர்களோ, அந்தக் குழந்தைகள் வெகு விரைவிலேயே பேசும் திறனைக் கற்றுக் கொள்கின்றன.இரண்டு வயதாகியும் சரியாகப் பேச்சு வராமல் இருந்த என் அண்ணன் மகன், சற்றேறக் குறைய அதே வயதுடைய-ஆனால் சரளமாகப் பேசக் கூடிய- என் தங்கை மகனுடன் சேர்ந்து வளரும் சூழ்நிலை வந்த போது, அவனது விடாத பேச்சை உன்னிப்பாக கவனித்து, மிகக் குறுகிய காலத்திலேயே தானும் பேசக் கற்றுக் கொண்டான்.

எப்படி உணவும், உடற்பயிற்சியும் நம் உடலை வளர்க்கின்றனவோ, அதே போல, குழந்தைகளுக்கு நிகழும் நல்ல அனுபவங்கள்,பயிற்சிகள் அதன் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
குழந்தைகள் பேச, நடக்கக் கற்றுக் கொள்வதற்கு வெகு முன்னமே, அவர்களின் மூளை வளர்ச்சி தொடங்கி விடுகிறது. முதல் மூன்று – நான்கு வருடங்களில் உருவாகும் ந்யூரல் வழித் தடங்கள் அவர்களின் பிற்காலத்திய கற்றலுக்கும், திறமைக்கும் சரியான அடித்தளமாக அமைகின்றன.

Baylor College of Medicine-இல் கண்டறிந்த ஆய்வு முடிவுகளின் படி, அடிக்கடி விளையாட வாய்ப்பும், பெற்றோர்களால் அடிக்கடி தொட்டு, தூக்கி, அரவணைக்கப் பட்ட கைக்குழந்தைகளின் மூளை, குறைவான அரவணைப்பைப் பெற்ற குழந்தைகளின் மூளையை விட அளவில் பெரியதாகவும், அதிகமான ந்யூரல் இணைப்புத் தடங்களையும் கொண்டிருந்ததாகவும் இருந்ததாம்.

சிறு குழந்தையின் மூளை வளர்ச்சித் திறனே, அதன் எதிர்காலத்தின் சாவியைத் தன்னுள் கொண்டுள்ளது என்பது நிரூபணமான உண்மை.ஒன்பது விதமான அறிவுத் திறன்களை குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.அவைகள்….
1. Visual – Spatial
2. Verbal – Linguistic
3. Logical – Mathematical
4. Bodily – Kinesthetic
5. Musical – Rhythmic
6. Interpersonal
7. Intrapersonal
8. Naturalist
9. Spiritual

எப்படி என்று பின்னர் பார்ப்போம்

Super Kidஹரிச் சந்திரன் கதையையும் சிரவணனின் கதையையும் கேட்டு வளர்ந்த ஒரு குழந்தை ஒரு தேசத்திற்கே வழிகாட்டிய மகாத்மா காந்தியாக தலைமை தாங்க முடிந்தது.
ராமாயண, மஹாபாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்த குழந்தை, சிவாஜியாக ஒரு சாம்ராஜ்யத்தை வழிநடத்த முடிந்தது.
ஓடும் பஸ்ஸில் தன் நண்பர்களுடன் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவனும் ஒரு காலத்தில் குழந்தைதான் – சரியான விழுமியங்கள், மதிப்பீடுகள், நெறிமுறைகள் கற்றுத் தரப் படாத குழந்தை.. எந்தத் தாயும் தன் குழந்தை ஒரு தலைசிறந்த சமூக விரோதியாக வரவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டாள். முன் தினம் ஃபேஸ்புக்கில் படித்தது “தன் மகன் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தான் எனத் தெரிந்த தாய் தூக்கிலிட்டுக் கொண்டு இறந்து போனாள்” என்று. ஒரு தாயாக, தான் தோற்றுப் போய் விட்டதாக மனமுடைந்து தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்.

இந்தத் தொடர், குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல.
மாமாவாக, சித்தப்பா, பெரியப்பாவாக, ஏதேனும் ஒரு வகையில் ஒரு குழந்தையுடன் தொடர்பில், உறவு முறையுடன் இருக்கும் நம் அனைவருக்கும் அவசியமான ஒரு தொடரே. நமக்குத் தெரிந்த,நம் கண் முன்னே வளரும் ஒரு குழந்தையின் வளர்ப்பில் நாம் ஏற்படுத்தும் ஒரு சிறு முன்னேற்றம், அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
baby_reaching_for_star_80150_7
ஒரு கதை படித்திருக்கிறேன்…
நீரில் மட்டுமே உயிர்வாழும் நண்டு இனங்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் கடற்கரைக்கு,தவறுதலாக வந்து தரையில் தத்தளித்துக் கொண்டிருக்க, ஒரு சிறுமி ஒவ்வொரு நண்டாக எடுத்துக் கடலில் தூக்கி எறிவாள்.
அதைக் கண்ட ஒரு பெரியவர், ”இப்படி தூக்கித் தூக்கி எறிவதால், இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகும் இத்தனை ஆயிரம் நண்டுகளின் வாழ்க்கையில் என்ன விளைவை ஏற்படுத்தி விட முடியும்?”என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ”ஆயிரம் நண்டுகள் அல்ல, நான் தூக்கிப் போடும் இந்த ஒரு நண்டின் வாழ்க்கையில் அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றாள்.
அதைப் போல, நம் முன்னே கோடிக் கணக்கான மனிதர்களைக் கொண்ட நம் சமுதாயத்தில் நம்மால் மாற்றங்களை அவ்வளவு எளிதில் உருவாக்கி விட முடியாது. ஆனால், நம் குழந்தையை ஒழுங்காக வளர்ப்பதன் மூலம் நம் சமுதாயத்தின் ஒரு அலகான நம் குழந்தையை சீரமைக்க முடியும்.

என் மகனை நெறிப் படுத்தி வளர்ப்பதன் மூலம் சமூக விரோதிகளின் எண்ணிக்கையில் நிச்சயம் ஒன்று குறைகிறது என்று சொல்லுவேன். மேலும்,அவனை. சக மனிதர்களை மட்டுமல்ல, உலகின் அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்கக் கூடிய,இயற்கையை நேசிக்கக் கூடிய ஒரு மேம்பட்ட மனிதனாக இந்த உலகுக்கு நான் வழங்க முடியும் என்று நம்புகிறேன்.
ஏனென்றால் மாற்றம் என்பது நம் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும்.
துவக்குவோம்

– டாக்டர்.பிரகாஷ்.

தொடரும்….

இட்லிவடை ப்ளாகில் வெளியான இந்தக் கட்டுரைக்கான லிங்க் http://idlyvadai.blogspot.in/2013/02/to-2.html

Did you like this? Share it:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *