ஸ்ரீவத்சனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று நான் படித்த, குழந்தை வளர்ப்புப் புத்தகங்கள், இணையப் பக்கங்கள், கலந்து கொண்ட குழந்தை வளர்ப்புப் பயிற்சி வகுப்புகளில் நான் கற்ற சில விஷயங்களை என் இணைய தளத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இது இட்லிவடை ப்ளாகில் ”சாதா குழந்தை To சூப்பர் குழந்தை” என்னும் பெயரில் வாரா வாரம் தொடராக வந்து கொண்டிருக்கிறது.
-பிரகாஷ்.
வணக்கம் இட்லி வடை வாசகர்களே.
சாதா To சூப்பர் குழந்தை மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இந்தத் தொடரை எழுதும் நான் பிரபல குழந்தை உளவியல் நிபுணரோ அல்லது நரம்புவியல் மருத்துவரோ அல்ல.
பிறந்து வளர்ந்தது மதுரை மண்ணில். வேலைக்காகக் கால்நடை மருத்துவம் சேர்ந்து, மார்க்கெட்டிங்கே என் மனதிற்குகந்தது என்று உணர்ந்து எம்.பி.ஏ பயின்று தற்போது பெங்களூரில் ஒரு தனியார்க் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிகிறேன்; ஒன்றே கால் வயதுக் குழந்தையின் தந்தை.அந்தக் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டி,அதற்கான பயிற்சிகள், வாசிப்புகளில் இறங்கி, நான் அறிந்து கொண்டதை, தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் பரிமாற விரும்பியதன் விளைவே இந்தத் தொடர்.
குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டும் தான் என்றில்லை- எல்லோருக்குமே இது அவசியமானது என்பதைப் போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்.
ஒரு குழந்தையின் வாழ்வின் முதல் நான்கைந்து வருடங்களில் அதற்கு என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் அமையும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
அப்படியான அந்த முக்கியமான காலகட்டத்தில் சரியான முறையில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? அதன் மூளை வளர்ச்சியை,படைப்பூக்கத்தை மேம்படுத்துவது எப்படி ? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக வருவதே இந்த “சாதா குழந்தை To சூப்பர் குழந்தைத் தொடர்.
அன்புடன்
டாக்டர்.பிரகாஷ்.
www.rprakash.in
இட்லிவடை ப்ளாகில் வெளியான இந்தக் கட்டுரைக்கான லிங்க் http://idlyvadai.blogspot.in/2013/02/to-1.html