மதயானை

வழிபாட்டுத்தலங்களில் பகைப்புகை.
சிலுவை சுமந்த கிருஷ்ணனும்
குழலூதும் அல்லாவும்
வெண்ணை உண்ணும் கிருஸ்துவும்
நெடி தாளாது விரைந்து வெளியேறினர்.
யாருமில்லை இப்போது அங்கு-
வால் நீங்கா சில மனிதர்களைத் தவிர.

Did you like this? Share it:

4 comments

 1. உனது கவிதை ” பாதைகள் பலவானாலும் சேருமிடம் ஒன்றே” என்பதை வலியுறுத்துகிறது எனக்கொள்கிறேன்.

  //யாருமில்லை இப்போது அங்கு-
  வால் நீங்கா சில மனிதர்களைத் தவிர.//

  இவர்கள் மனிதர்களாவதற்கு பிடிக்கும் பல யுகங்கள்.. ஜெயக்குமார்

 2. நல்ல கவிதை ப்ரகாஷ். தொடர்ந்தூ எழுதுங்கள்..

 3. சுப்ரமணியசாமி,
  ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
  தொடர்ந்து வாசிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *