கோவில் திருவிழா

“நன்றாக உடைய வேண்டுமே”
தேங்காய்க் கூடையுடன்
பயம் கலந்த பக்தியில் பெண்கள்।
சின்னவயது பள்ளித்தோழிகளை
பார்வையால் தேடும் இளசுகள்।
அழும் குழந்தைக்கு அருகிலேயே
வந்து விற்கும் பலூன்காரன்।
வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளுடன்
சுற்றும் ராட்டினத்தில் சிறுவர்கள்।
திருவிழாவைவிட புதுப்பாவாடை தந்த
குதூகலத்தில் சிறுமிகள்।
கோவில் மணி ஓசையையும்,
சிலரது சாராய நெடியையும்
பாரபட்சமின்றி சுமந்து திரியும் காற்று।
புதிதாய் முளைத்த வெளிச்சத்தில்
சற்றே கலவர முகத்துடன் இருள்
எப்போதும் போல் எதுவும் பேசாமல்
மெளனமாய் அமர்ந்திருக்கும் சாமி।
Did you like this? Share it:

4 comments

 1. //புதிதாய் முளைத்த வெளிச்சத்தில்
  சற்றே கலவர முகத்துடன் இருள்//

  Nice.

 2. ப்ரகாஷ்..

  சூழ்நிலையை மிக நன்றாக விவரித்துள்ளீர்கள். நன்று.

  //புதிதாய் முளைத்த வெளிச்சத்தில் சற்றே கலவர முகத்துடன் இருள்
  எப்போதும் போல் எதுவும் பேசாமல்மெளனமாய் அமர்ந்திருக்கும் சாமி।// நல்ல வரிகள்.

  வாழ்த்துக்கள்.

  ஜெயக்குமார்

 3. பிரசன்னாவுக்கும்,ஜெயக்குமாருக்கும் என் நன்றிகள்.

 4. அழும் குழந்தைக்கு அருகிலேயே
  வந்து விற்கும் பலூன்காரன்।

  The seller is making the most of now. By reading this i remember the car festival i attended in your village. really you have a good observation skill and making it black and white in an attractive manner. Keep it up Prakash.

  regards,

  Daniel.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *