உறுப்புகள்

வெறிக்கப்பட்டு வெறிக்கப்பட்டு
மியூசியத்தின் உயிரற்ற உடலாய்
கழுத்துக்குக் கீழே எனது உறுப்புகள்.
நெரிசலில் உரசும் ஆண்களின்
எந்த உறுப்பும் அவன் குறியாகி
காம விந்துவை வெளியேற்றும்.
எதிர்ப்படும் எவனும் இன்று
அதிசயமாய் முகத்தையே முறைக்க
கண்ணாடியில் பார்த்தேன்
முகத்தில் முளைத்திருக்கிறதோ
முலைகள் ஏதுமென்று.

Did you like this? Share it:

One comment

  1. பெண்ணிய கவிஞராக மாறி வருகிறிர்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.. நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் அதற்கு.. நல்ல உதாரனமாய் ஆசிப் மீரானைச் சொல்லலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *