இல்லாத சில ஹைகூக்கள்

சிரித்துக் கொண்டே
அழும் காந்தி
லஞ்சப் பணத்தில்.

பல்லிடுக்கில் முடிகள்
அசூயையற்று
சீப்பு.

7கழுதை வயதாகியும்
12க்கு மேல் தெரியாத
கடிகாரம்.

கிழ ஆலத்தின்
ஊன்றுகோலாய்
விழுதுகள்.

கண்ணாமூச்சியில்
நிலா,பூமி
அமாவாசை.

கவிதையின்
போன்சாய்
ஹைகூ.

கடவுளின் முகவரி
அடைப்புக் குறிக்குள்
( )

சந்தேகப் பிராணியாய்
திரும்பத் திரும்ப எண்ணும்
கடிகாரம்.

Did you like this? Share it:

7 comments

 1. இவற்றில் எதுவுமே ஹைகூ இல்லை. எல்லாமே ஒருவித உருவகத்தன்மை கொண்ட வரிகள் மட்டுமே. (கவிதைகூட அல்ல!) முதலில் ஹைகூ பற்றிய சுஜாதா, அறிவுமதி, அமுதபாரதி, யுவன் சந்திரசேகர் எழுதிய கட்டுரைகள், புத்தகங்களைப் படிக்கவும். பின் ஒரு வரையறை கிட்டலாம். நன்றி.

 2. சந்தோஷமாக இருக்கிறது நான் எதிர்பார்த்த விமர்சனம் வருகையில்.
  என்னை வளர்த்துக் கொள்ள உறுதுணையான உங்கள் விமர்சனம்.
  நன்றி பிரசன்னா.

 3. பிரகாஷ்!
  உன் கவிதை பதிவுகள் சில மனதிலும் இடம் பிடிக்கின்றன.
  வித்தியாசமான எண்ண ஓட்டங்கள் மிகவும் ரசனையாக இருக்கிறது.
  சிலவற்றுக்கு வார்த்தை/வாக்கிய சிக்கனங்கள் தேவை. இன்னமும் மெருகேரும்.
  Ebook(pdf) பதிக்கவேண்டுமானால் தெரிவி, உதவி செய்கிறேன்.
  -சூரியக்குமார்

 4. சூரியக்குமார்,
  வருகைக்கும்,பாராட்டுக்கும்,உதவிக்கும் நன்றி.
  நிச்சயம் தேவைப்படும்.
  தொடர்பு கொள்கிறேன்.
  நன்றி.

 5. //சந்தோஷமாக இருக்கிறது நான் எதிர்பார்த்த விமர்சனம் வருகையில்.
  என்னை வளர்த்துக் கொள்ள உறுதுணையான உங்கள் விமர்சனம்.
  நன்றி பிரசன்னா.//

  சந்தோசமெல்லாம் இருக்கட்டும்… மொதல்ல அய்யா சொன்ன புத்தகங்களை வாங்குங்க.. அறிவ பெருக்குங்க.. அப்புரம் சந்தோசப்படலாம்..

 6. Prakash,

  The socalled hikoos reminds me your early days… come up man..

  Thats why I never ventured in this line…=::)

 7. மிக்க நன்றி என்னத்த கன்னையா.
  //மொதல்ல அய்யா சொன்ன புத்தகங்களை வாங்குங்க.. அறிவ பெருக்குங்க.. அப்புரம் சந்தோசப்படலாம்..//
  தமிழ்நாடு செல்கையில் முதல் வேலையாய், வாங்கிப் படிக்கிறேன்.
  இல்லையெனில் இருக்கவே இருக்கிறது
  எனி இந்தியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *