விடியற்காலை

புரண்டு படுத்ததால் பூமிப்பந்தின்முதுகு பார்த்திருந்தவெளிச்சம்இப்போது முகம் நோக்கி. விழித்த உடனேயே அன்றைய இருத்தலைஉறுதி செய்து கொள்ளும் ஜீவராசிகள். மீண்டும் வெளிச்சக் கண்ணாடிபொருத்திக்கொண்டஇருள் கண்கள். தான் மெளனமாகி,பிற சப்தங்களை கடத்தும்காற்று. பொய்கள் சுமக்கும் நாளிதழ்கள்போலியான வெட்கத்தில் வீட்டு வாசலில். அன்றைய காலைக் கடனுக்கானகாத்திருப்பில் நாட்காட்டி. உறக்கம் கலைந்த எரிச்சலில்மனிதர்களை எழுப்பும் அலாரம்.

Continue reading »

மதயானை

வழிபாட்டுத்தலங்களில் பகைப்புகை.சிலுவை சுமந்த கிருஷ்ணனும்குழலூதும் அல்லாவும்வெண்ணை உண்ணும் கிருஸ்துவும்நெடி தாளாது விரைந்து வெளியேறினர்.யாருமில்லை இப்போது அங்கு-வால் நீங்கா சில மனிதர்களைத் தவிர.

Continue reading »

அர்த்தமுள்ள கேள்விகள்.

தரமான சிந்தனைக்கு அடையாளம்-கேள்விகள் கேட்பது தான்.கேள்விகள் நமது சிந்தனையைத் தூண்டுகின்றன.நமது கருத்துக்கள் சரியா,தவறா என்று இனம் கண்டறிய உதவுகின்றன.சில கேள்விகள் நமது வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை கொண்டவை.நம் வாழ்வில் வரும் எல்லா கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரியும்(தெரியாவிட்டால் இன்னும் சரியாக முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்)நீங்கள் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது திருடனாகவோ (அல்லது இரண்டும் சேர்ந்தவராகவோ) […]

Continue reading »
1 33 34 35 36