எச்சம்

விழித்துத் தலை உலுக்கியும்விலகாத கனவுகள் உதைத்து விரட்டியும்தொடரும் நிழல் இறங்கிய பின்னும் தலைக்குள்சுற்றும் குடை ராட்டினம் ஒரு வேலையும் செய்யாவிடினும்ஒட்டிக் கொண்டிருக்கும் தொப்புள் அஸ்தமனம் ஆனபோதும்அணைந்திடாத வெளிச்சம் ஆழச் செருமி உமிழ்ந்தபின்னும்அடங்கிடாத கமறல்-திறந்த வாய்ப் பிம்பத்தில்உள்நாக்காய்ச் சிரிக்கும் முதற்காதல்.

Continue reading »

ஒன்றும் செய்வதற்கில்லை

முகத்தில் வந்தறைந்துவிழி சிவக்க மண் வீசிஎடுப்பான கேசத்தைஏளனமாய்க் கலைத்துஇடுப்பு வேட்டியைஇழுத்து உருவிட,ததும்பிய கோபம்தலைக்கேறிப் போனாலும்,ஒன்றும் செய்வதற்கில்லை-குழந்தை,காற்று.

Continue reading »

காத்திருத்தல்

பிரக்ஞயாய் வெளிப்படும் தகித்த பெருமூச்சுகுழப்பத்தில் தொங்கியபடி சிறகொடிந்த எண்ணங்கள்எப்போதோ இழந்துவிட்ட வாய்ஏளனமாய் வெறிக்கும் வெளிசலித்துப் போன உணர்வுஎன்னையே தின்னத் துவங்க,கடைசி விள்ளலை விழுங்கும் முன்பாவது வருவாயா?

Continue reading »
1 31 32 33 34 35 36