அடுத்து வரப்போகும் ரயில் பற்றியோகடந்து சென்ற ரயில் தந்த வலி பற்றியோகொஞ்சமாய் வந்து விழுந்தகுழந்தையின் மலம் பற்றியோமுழுக்க வருடுகின்ற குளிர்காற்றைப் பற்றியோ-கேட்பதற்கு யாருமேயில்லை என்றாலும்-தமக்குள் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்இணை தண்டவாளங்கள்.
Continue reading »Author: Prakash
நான்கு ஹைகூக்கள்
”நான்கு ஹைகூக்கள்”என்று தலைப்பெழுதிமுதல் மூன்றுக்கு அப்புறம்நான்காவதாக“இன்னும் எழுதப்படாமலிருக்கும்ஒரு ஹைகூ”என்று எழுத ஆசைதான்.என்ன செய்வது?முதல் மூன்றும்இன்னும் முடிந்தபாடில்லை.
Continue reading »கற்பிதம்
“இந்த மேஜை என்ன சொல்கிறது?””அந்த மின்விசிறி என்ன சொல்கிறது?””காலை உரசிச் செல்லும் என் பூனைக்குட்டி என்ன சொல்கிறது?”யோசிப்பில் கிடைத்த பதில்கள்.”ஒன்றுமே நாங்கள் சொல்லவில்லையே”-கதறின அவைகளைப் புறந்தள்ளி விட்டுஎன் கவிதையைப் பிரசுரிக்க விரைந்தேன்
Continue reading »