சீக்ரெட் சாண்டா தீபிகா பேசுகிறேன் ;)

Deepika

ஹாய்!
இதப் படிக்கிறதுக்கு முன்னாடி பிரகாஷ் எழுதியிருக்கிற இந்தப் போஸ்ட்டப் படிச்சிருங்க சீக்ரெட் சாண்டாவிடம் பட்ட பாடு அதோட தொடர்ச்சிதான் இது.

அதாவது என்னோட கோணத்துல இருந்து நான் சொல்றது

Deepika

ராதிகாவும் ரஞ்சனியும் சீட்டு எடுக்கச் சொன்னாங்க. பிரகாஷ் சார் பேர் வந்துச்சு. சரி. ஒரு கை பாத்துரலாம். செமயா கலாய்ச்சுற வேண்டியதுதான் னு நெனச்சுக்கிட்டேன். அதே சமயம், ஐயையோ, அவர்கிட்ட சரியாக் கூட பேசிப் பழகுனது இல்லயே. அப்படீங்கற பயமும் மனசுல இருந்துச்சு.ஒரு வாட்டி எஸ் ஆர் எஸ் பஸ்சுல மதுரைக்குப் போய்ட்டு இருந்தப்ப, எனக்கு முன்னால யாரோ இளையராஜா பாட்ட லேசாக் கேட்டுட்டு இருந்தாங்க. யாருன்னு பாத்தா, எனக்கு ஒரே சர்ப்ரைஸ்.பிரகாஷ் சார். சார் நீங்களா? நீங்க எப்பிடி இங்கன்னு கேட்டா, அவருக்கும் மதுரைதான் சொந்த ஊராம், ஏதோ ஃபங்ஷனுக்குப் போறதா சொன்னாரு.அப்பப் பேசியிருக்கேன். அப்புறம் வெப்சைட் டெவலப் பண்றது, கூகுள் அனலடிக்ஸ் ரிப்போர்ட்டுக்குன்னு மொத்தமே ஒரு நாலஞ்சு தடவ தான் அவர்ட்டப் பேசியிருப்பேன்.

நாலு நாள்ல இந்த கேம் முடிஞ்சு 29 ஆம் தேதி நாம யாருன்னு நம்ம ஏஞ்சலுக்கு ரிவீல் பண்ணனும். முத நாள், சாண்டாக்ளாஸ் பிரிண்ட் அவுட்ட எடுத்து, கிருஸ்துமஸ் கேன்சல்னு ஃபன்னியா அதுக்கு ரீசன்ஸ் எழுதி, என்னய யாருன்னு கண்டுபிடியுங்களேன் னு எழுதி, அட்டெண்டர்ட்ட குடுத்து அனுப்பிச்சேன்

எனக்கு கீச் செயின்னா ரொம்பப் பிடிக்கும். தேடிப் பிடிச்சு P ங்கிற கீ செயின வாங்கி, அதப் பேப்பர்ல ஒட்டி அவர் பேர எழுதி அதிலயே ஒட்டி அனுப்பி இருந்தேன். நாலு நாள் இருக்கு. அதுக்குள்ள எவ்வளவு கலாய்க்கணுமோ, அவ்வளவு கலாய்க்கணும்னு தோணுச்சு.

எனக்கு அழகான hand craft works எல்லாம் பிடிக்கும். எலெக்ட்ரானிக் சிட்டில அந்த மாதிரி அழகான கிஃப்ட்ஸ் எல்லாம் ஒண்ணும் தேறல. ஈவ்னிங், என்னோட ஃப்ரண்டக் கூட்டிக்கிட்டு சந்தாப்புரா போய், அங்க டீ மார்ட்ல, கொஞ்சம் கிஃப்ட்ஸ் எல்லாம் வாங்குனேன்நிறைய சாக்லேட்ஸ், அப்புறம் அவருக்கு ஒரு பேபி இருக்குன்னு ஞாபகம் வந்து பால் ஒண்ணு வாங்குனேன்..எனக்குக் கர்ச்சீஃப் ரொம்பப் பிடிக்கும். அதனால லைட் ப்ளூல ஒரு கர்ச்சீஃப் வாங்கிட்டு, அதுல P ந்னு எம்பிராய்டரி போட்டுத் தரலாம்னு நெனச்சேன். நூல் கிடைச்சது ஆனா, ஊசியத் தேடித் தேடிப் பாத்து எங்கயுமே கிடைக்கல. கடைசியா ஒம்பது மணிக்கு அடைச்ச கடைய கெஞ்சிக் கூத்தாடி திறக்கச் சொல்லி ஊசிய வாங்கினோம்.

ஊசிய வாங்கிட்டனே தவிர, எனக்கு எம்பிராய்டரி எல்லாம் போட வராது. போட்ட எம்பிராய்டரிய பிரிக்க மட்டும் தான் தெரியும்.:) என் ஃபிரெண்ட்ஸ்ங்ககிட்டயும் கேட்டுப் பாத்துட்டேன். ஒருத்திக்கும் போடத் தெரியாதுன்ன வுடனே, சரி, ஏதோ, நமக்குத் தெரிஞ்சதப் போடுவோம் னு, நானே தட்டுத் தடுமாறி எம்பிராய்டரி பண்ணேன் பரவால்ல- கேவலமால்லாம் வரல்ல. அத மடிச்சு, பெர்ஃயூம் போட்டு, ஒரு ரேப்பர்ல வச்சி, மறு நா ஆஃபிஸ் போனவுடனே அத அட்டெண்டர் கிட்ட குடுத்து, குடுக்கச் சொன்னேன்.
சாக்லேட்ஸ், கிஃப்ட்ஸ் எல்லாத்தையும் ஒரு மூட்டைல கொண்டு வந்து என் கப்போர்டுல வச்சிருந்தேன்.டிபார்ட்மெண்டே என்னை ஆச்சரியமாப் பாத்துச்சு. இந்த சிவன்னா, நான் இல்லாத நேரமாப் பாத்து என்னோட சாக்லேட்ல நாலஞ்ச ஆட்டயப் போட்டுட்டார். சரி என்ன பண்ணலாம்னு, நான் அவர் எடுத்து வச்சிருந்த பெரிய சைஸ் எரேசர சுட்டுட்டேன். அத சாக்லேட் ரேப்பர்ல கவர் பண்ணி என்னோட சிட் கூட சேத்து பிரகாஷ்க்கு அனுப்பி வச்சிட்டேன்.

Gifts for Secret Angels
சரி. நாம பாட்டுக்குக் குடுத்துக் கிட்டே இருக்கோம். அவர் எப்பிடித்தான் ரியாக்ட் பண்றாருன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்துச்சு. அவரு பல்ஸ் பாப்போம். ஓகேன்னா ப்ரஸீட் பண்ணுவோம், இல்லேன்னா, பேசாம பம்மீப் பதுங்கீருவோம்னு நெனச்சுக்கிட்டேன்.
இதுக்காகவே தனியா சீக்ரெட் ஏஞ்சல்னு ஒரு ஜிமெயில் ஐடி-ய க்ரியேட் பண்ணி, ”என்ன? என்னையக் கண்டுபிடிச்சாச்சா?” ன்னு கேட்டு எழுதி அனுப்பி இருந்தேன். சாயங்காலம் வரைக்கும் பதிலே வல்ல. ஏதாவது மீட்டிங்ல இருப்பாரோன்னு நெனச்சுக் கிட்டேன். லஞ்சுக்கு அப்புறமா, மெதுவா, அவர் க்யூபிக்கள க்ராஸ் பண்ணிப் போய்ப் பாத்தேன். ”ஹலோ, ஆஃபிஸ்ல இருந்தா, மெயில்லாம் பாக்கணும், தெரியுதான்னு” சொல்ல நெனச்சு, சொல்லாம வந்துட்டேன்.

Key chain

நேரமாக ஆக எனக்குக் கவலையா இருந்துச்சு. பக்கத்துல உக்காந்து இருக்குற கோபி வேற, ஏய், நீ என்ன, மானேஜர் லெவல்ல இருக்குறவர்ட்ட எல்லாம் உன் சேட்டையக் காமிக்கிறனு பயமுறுத்துனாரு. 29 ஆம் தேதி உனக்கு லாஸ்ட் வொர்க்கிங் டேயா ஆகாமப் பாத்துக்கன்னு சொல்லி வெறுப்பேத்துனாரு.

சரின்னு யோசனையாவே ஒரு கேக் வாங்கி, ஒரு லெட்டரயும் வெச்சு அட்டெண்டர்கிட்டகுடுத்தனுப்பிச்சேன்.
கொஞ்ச நேரத்துல என் மெயிலுக்கு ரிப்ளை வந்துருந்துச்சு.கிஃப்ட்ஸ் எல்லாம் கிடைச்சதாம்.. ரொம்ப தேங்க்ஸாம். நான் யாருன்னு கண்டுபிடிக்க இன்னும் க்ளுஸ் வேணுமாம்.

இன்னும் ஏதாச்சும் க்ளு குடுத்தா என்னய ஈஸியாக் கண்டுபிடிச்சுருவாரு.இன்னும் ரெண்டு நாள் வேற பாக்கி இருக்கு. அதுக்குள்ள, அவர் என்னயக் கண்டே பிடிக்காம இருக்கணும்னா, எந்தக் க்ளுவும் குடுக்கக் கூடாதுன்னு நெனச்சுக்கிட்டேன்.
யோசிச்சுப் பாத்துட்டு, சரி. நாம ஏன் நம்ம ஏஞ்சலுக்கு ஒரு ட்ரஸர் ஹண்ட் வைக்கக்கூடாதுன்னு நெனச்சு, அதப் ப்ளான் பண்ணேன். முதல் சீட்ட(க்ராஃபிக் டிசைனரைக் கேட்கவும் அப்பிடீங்கற க்ளு) அவங்க ஹால்ல இருக்குற வாட்டர் ஃபில்டர் பக்கத்து டேபிள் ட்ராயர்ல வச்சுட்டேன். பிரகாஷ் டேபிள்ள கொஞ்சம் சாக்லேட்ஸீம், ஒரு சிட்டையும் வைக்கலாம்னா, அவரு சீட்ல கம் போட்டு ஒட்டுன மாதிரி எங்கயுமே நகர மாட்டேங்குறாரே.அவரக் க்ராஸ் பண்ணி,அடுத்த க்ளுவ, க்ராஃபிக் டிசைனர் சஞ்சீவ் கிட்டக் குடுக்கணும்னு, ஒரு சீட்டு (அந்த சீட்டுல அடுத்த ஹால்ல இருக்குற நதியா மேடத்தப் பத்தின) க்ளுவோட மூணு சாக்லேட்ஸ், ஒரு கிஃப்ட் எல்லாத்தையும் கொண்டு போனா, சஞ்சீவ் சீட்ல இல்ல. சரின்னு, அவர் டேபிள்க்கு உள்ள வச்சிட்டு வந்துட்டேன். அப்புறமா, சஞ்சீவ்க்கு ஃபோன் பண்ணி சொல்லிக்கலாம்னு நெனச்சு என் சீட்டுக்கு வந்துட்டேன்.

kerchief

அதுக்குள்ள யாரு வந்து இத வச்சான்னு விசாரிச்சு, நதியா மேடம் எனக்கு ஃபோன் பண்ணி, “நீதான் என்னோட சீக்ரெட் சாண்டாவானு கேட்டாங்க”. இல்லயே என்னன்னு கேட்டா, இந்த சஞ்சய், வந்து ஏதோ எனக்கு ஏதேதோ குடுத்துருக்காரு, நீ வந்து அவர் டேபிள்ள வச்சியாம் எனக்கு ஒண்ணும் புரியலன்னாங்க

ஐயோ, அது நான் என் ஏஞ்சலுக்காக வெக்கிற ட்ரஸர் ஹண்ட், இது வந்து நான் அவங்களுக்குக் குடுக்குற க்ளு அப்பிடீன்னு சொல்லி நதியா மேடத்துக்கும் சஞ்சீவ்க்கும் ஃபோன்லயே புரிய வச்சேன்.சூப்பர் ஸ்டார வரைய நெனச்சு வரைஞ்சா, கடைசீல அது பவர் ஸ்டாரா வந்த மாதிரி நான் ஒண்ணு நெனக்க, அது ஒண்ணா முடியுதேன்னு நொந்துக்கிட்டே,அட்டெண்டரைக் கூப்பிட்டேன்.
இப்ப நான் குடுக்குறத நதியா மேடத்துக்கிட்டப் போய் குடுத்துட்டு, ஏற்கெனவே அவங்ககிட்ட இருக்குறத வாங்கி சஞ்சீவ் கிட்ட குடுத்துருன்னு படிச்சுப் படிச்சுத் தெளிவா சொல்லி அனுப்பிச்சேன்.

2013-01-03 16.12.16 edited

நதியா மேடம் கிட்ட குடுத்த சீட்டுல கிர்தர் பெயரை மறைமுகமாக எழுதி விட்ருந்தேன், க்ரிதர்ட்ட போய், உன்கிட்ட ஒரு ஆள் வருவாங்க. வந்து க்ளூவ கேப்பாங்க. அவங்ககிட்ட இந்த சாக்லேட்டையும்,கிஃப்ட் எல்லாத்தையும் குடுன்னு சொல்லிட்டு திரும்புனேன்.. பிரகாஷ் தூரத்துல இருந்து என்னப் பாத்த மாதிரி இருந்தது. ஆஹா, மாட்டிக் கிட்டேனா? அப்டீன்னு மெதுவா அவர்கிட்ட வந்து, சார், கூகுள் அனலடிக்ஸ் ரிப்போர்ட்ஸ் பண்ணி முடிச்சுட்டேன் சார், அத அனுப்பட்டுமான்னு ஒண்ணும் தெரியாதவ மாதிரி கேட்டேன். அவரும் சரின்னாரு.

என்னோட சீட்டுக்குப் போய், ட்ரஸர் ஹண்ட் பத்தி ஒரு லெட்டர எழுதி, அதுல முதல் க்ளுவுக்கு வாட்டர் ஃபில்டர் பக்கத்துல பாக்கவும்னு எழுதி ஆபிஸ் பாய்கிட்டக் குடுத்து அனுப்பினேன்.ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு, அவர்ட்ட இருந்து மெயில் வந்துச்சு.ட்ரஸர் ஹண்ட்ட, கேன்சல் பண்ணனும்னு. வாட்டர் ஃபில்டர் பக்கத்துல எந்தக் க்ளூவையும் காணலயாம்.
என்னாச்சு, இன்னிக்கு சகுனமே சரியில்லையே எல்லாமே சொதப்பலா நடக்குதேன்னு சரி. என்ன பிரச்சனைன்னு பாக்கணுமே. கூகுள் அனலடிக்ஸ் ரிப்போர்ட்ட அவருக்கு மெயில்ல அனுப்பிட்டு, அத சாக்கா வச்சு, நைசாப் போய் என்ன நடக்குது, ட்ரஸர் ஹண்ட் விளையாடுறப்ப, அவர் எப்டி ரியாக்ட் பண்றாருன்னு பாக்குறதுக்காக அவர் இடத்துக்குப் போனேன். அவரும் அவரோட அட்டெண்டரும் டேபிள் மேல பீஸ் பீஸா ஏதோ பேப்பர வச்சி குழம்பிட்டு இருந்தாங்க
அட!, அது நான் வாட்டர் ஃபில்டர் டேபிள்ள வச்ச க்ளுவாச்சே..

நான் வெச்சிட்டுப் போனதுக்கப்புறம் அந்தப் பக்கமாப் போன க்ளீனிங் அட்டெண்டர் ஓவர் கடமை உணர்ச்சியில அதக் குப்பைன்னு நெனச்சுக் கிழிச்சு டஸ்ட் பின்ல போட்டுட்டார் போல.

சார், மெயில் அனுப்பிச்சுட்டேன். ரிப்போர்ட்டப் பாத்துட்டு ரிப்ளை பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே, அந்தப் பேப்பரப் பாத்தா, கிராஃபிக் அப்டீங்கற வார்த்தை மட்டும் தான் தெரியுது. மத்ததெல்லாம் சுக்கு நூறாக் கிழிஞ்சுருக்கு.

நெலமய சமாளிக்கணுமேன்னு, சார், நான் வேணா உங்க சாண்டாகிட்ட என்னன்னு கேக்குறேன் சார்னு சொல்லிட்டு, என் சீட்டுக்கு வந்து அதே க்ளுவ இன்னொரு தடவ எழுதி, அவரோட அட்டெண்டர்ட்ட தரச் சொல்லி பாஸ் பண்ணேன்.

.சரி. இனிமே ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றதுன்னு, நான் அவர் ட்ரஸர் ஹண்ட் பண்றப்ப அவர் கூடவே இருக்கலாம்னு முடிவு பண்ணேன்.,

முதல் க்ளூவப் படிச்சிட்டு,சஞ்சீவ் கிட்டப் போனாரு. நானும் பின்னாடியே போனேன். சஞ்சீவ்,, நான் குடுத்த சீட்டையும் கிஃப்ட் பார்சலையும் மட்டும் குடுத்துட்டு, சாக்லேட்டக் குடுக்கல. அடப்பாவி.சஞ்சீவ், சாக்லேட்ட அமுக்கிட்டயேன்னு, நான் பின்னால இருந்து பல்லக் கடிச்சுக்கிட்டு, கோவமா கண்லயே சஞ்சீவ்க்கு ஜாடை காட்டேறேன். ஹலோ, சாக்லேட்டக் குடுங்க சாக்லேட்டக் குடுங்கன்னு. ஊஹீம். அதுக்குள்ள சஞ்சீவ் கிட்ட க்ளூவ வாங்கிட்டு பிரகாஷ் அடுத்த க்ளுவுக்காக பக்கத்து ஹாலுக்கு நடக்க ஆரம்பிச்சாரு.

சஞ்சீவ் கிட்ட, ஹலோ, என் ஏஞ்சல்கிட்ட குடுக்கச் சொன்ன சாக்லேட் எங்கன்னு கேட்டா? கூலா, அத நான் சாப்பிட்டுட்டேன்னு சொல்றார். நல்ல வேளை! இவர நம்பி பெரிசு பெரிசா டெய்ரி மில்க் சில்க்,சாக்லேட் எதுவும் குடுக்கல. எல்லாம் மீடியம் சைஸ்தான்னு என்ன நானே மனசத் தேத்திட்டேன்.வேகமாப் போய், பிரகாஷ் கூட ஜாயின் பண்ணிக்கிட்டேன். N ல ஸ்டார்ட் ஆகி A ல முடியுற தமிழ்ப் பொண்ணு இங்க யாருன்னு அவர் நதியா மேடத்தக் கண்டுபிடிச்சு அவங்க கிட்டப் போய், க்ளூவக் கேக்கும் போது, கூடவே இருந்த என்னைய நதியா மேடம் பாத்தாங்க.. சொல்லிட்டியான்னு ஷாக்காகிக் கண்லயே கேட்டாங்க. மெதுவா அவங்கள ஒரு கிள்ளு கிள்ளி, ஐயோ, இன்னும் தெரியாது, உளறிராதீங்க ன்னு ஜாடை காமிச்சேன்.அங்க இருந்த க்ளுவ வாங்கிக்கிட்டு,அடுத்த ஆளக் கண்டுபிடிச்சு , க்ரிதர் கிட்ட வந்தோம்.க்ரிதர் நல்ல பையன். சாக்லேட், கிஃப்ட் எல்லாத்தையும் கரெக்டா குடுத்தான். பிரகாஷ் முகத்தப் பாத்தேன். கோவமா இருந்த மாதிரித் தெரியல.

சரின்னுட்டு நான் வர்றேன் சார்னு சொன்னப்ப, யாருன்னு சொல்லுங்களேன்னார்.சரி. அவர நல்லாக் குழப்பி விட்றலாம்னு நெனச்சு, முதல் எழுத்து ஆர் ல ஆரம்பிக்கும்னு சொன்னேன். கடைசி எழுத்து? அதெல்லாம் சொல்ல முடியாது. அவ எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்டு.நான் சொன்னேன்னு தெரிஞ்சா, என்னக் கொன்ருவா ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
பிரகாஷ்ட்ட இருந்து தேங்ஸ் ரிப்ளை வந்துருந்தது.

சரின்னு, அடுத்த கடிதத்துல டிரஸ் கோட் பத்திச் சொன்னேன். நான் சொன்ன டிரஸ் கோட்லஎல்லாம் வரமுடியாதுன்னு ரிப்ளை
இரு. ஒழுங்கா நான் சொன்ன ட்ரஸ் கோட்ல வந்தா கூட நாலு சாக்லேட். இல்லேன்னா, அதுக்கு ஏதாவது பெனால்டி குடுக்கணும். என்ன பெனால்டி குடுக்கலாம்னு யோசிச்சேன்.

நாளைக்கு நான் யாருன்னு ரிவீல் பண்ணனும். ஆனா அதுக்குள்ள இன்னொரு கேம் சூப்பரா ஆடலாம்னு யோசிச்சேன். கிஃப்ட்டும் இன்னும் நல்லா செல்க்டிவ்வா குடுக்கணும்னு நெனச்சேன். அவரோட ஃபோட்டோவ எடுத்து ஃபோட்டோ மக் செஞ்சு ப்ரெசண்ட் பண்ணலாம். நல்ல ஐடியான்னு, அவர்கிட்ட அவரோட ஃபேஸ்புக் ஃப்ரொபைல் ஐடியக் கேட்டு தேடுனேன். அவர் என்னைய ரஞ்சனின்னு நெனச்சுட்டு இருக்கார். திடீர்னு, இல்ல, நீ ரஞ்சனி இல்லன்னு ஒரு ரிப்ளை.ஐயையோ. கண்டு பிடிச்சுட்டாரா? அப்டீன்னு பயந்துட்டேன்.

ஈவ்னிங் கெளம்பறதுக்கு முன்னாடி, ஒரு Munch சாக்லேட்ட எடுத்து, சித்ரா மேடம் கிட்ட குடுத்து, ”இத உங்க சாண்டா நேத்தே என் கிட்ட குடுத்து உங்ககிட்ட இன்னிக்குக் குடுக்கச் சொன்னாங்க”ன்னு சொல்லி பிரகாஷ் கிட்டக் குடுங்கன்னேன்.அப்பத் தான் இன்னிக்கு லீவ்ல இருக்குற ரஞ்சனி மேல அவருக்கு டவுட் பலமா வரும்னுட்டு.அவர நல்லாக் கன்ஃப்யூஸ் பண்ணி கொலாப்ஸ் பண்ணீரலாம்னு அப்பிடிப் பண்ணேன்.

அதே மாதிரியே அவரும் சரியா கன்ஃப்யூஸ் ஆகிட்டார்.
நான் வேணுமின்னே என்ன கலர் ஷர்ட் இன்னிக்குன்னு மெயில்ல கேட்டதுக்கு, ”இட்ஸ் வொயிட் ரஞ்சனி”ன்னார்.எனக்கு சிரிப்புத் தாங்க முடியல.

ஈவ்னிங், கிர்தர்ட்ட கேட்டு அவரோட மொபைல் நம்பர வாங்கி தேங்ஸ் ஃபார் கமிங் இன் வொயிட் ஷர்ட் ன்னு மெசேஜ் பண்ணேன். ஃபோட்டோ மக் பண்றதுக்கு அவரோட எஃப் பி ப்ரொஃபைல் போட்டோவைக் குடுத்தா, இது ரொம்ப ரெசல்யூசன் கம்மியா இருக்கு, இதுல நல்லா வராதுன்னு சொல்லிட்டாய்ங்க. சரின்னு, போட்டோ ஃபிரேம் ஐடியா ட்ராப் பண்ணிட்டேன்.

மறுநாள் காலையில தூங்கிட்டு இருந்தப்ப, திடீர்னு ரூம் மேட் என்னய அடிச்சு எழுப்பினா. ஏய் ஃபோன் டீ.
புது நம்பரா இருந்துச்சு. எடுத்துப் பேசுனா…
ஆர் யூ ரஞ்சனி ன்னு. .. ஓஹோ, பிரகாஷ் தான் னு புரிஞ்சுக்கிட்டேன்.

எதுவும் சொல்ல வேணாம் னு அடித்தொண்டையில கெஸ் ன்னு சொல்லிட்டு, வில் டாக் லேட்டர்னு சொல்லி கட் பண்ணிட்டேன். சே. மூஞ்சில அடிச்ச மாதிரி அப்பிடிக் கட் பண்ணிருக்கக் கூடாது. சரி அதுக்காக அப்புறமா ஸாரி கேட்டுறலாம் னு வேக வேகமா ஆஃபிசுக்கு வந்து உக்காந்தா, மறுபடியும் ஃபோன் அடிச்சுது. பேக்கில இருந்து எடுக்குறப்ப, உள்ள வந்த பிரகாஷ் அவர் ஃபோனக் கையில பிடிச்சுக்கிட்டே, ஓ. அது நீங்க தானா ன்னு சொன்னாரு. சே. எப்பவும் சைலண்ட் மோடுல போடுவேன். இன்னிக்குப் போட மறந்துட்டேனே ன்னு புலம்புனேன்.

இதப் பாத்துக் கிட்டு இருந்த சித்ரா மேடம், ராஜீ சார் எல்லாம் வந்து, தெரிஞ்சு போச்சா, தெரிஞ்சு போச்சான்னு கேட்டாங்க. இல்ல இல்ல, இன்னும் தெரியாதுன்னு சொன்னேன்.பத்து மணிக்கு சீக்ரெட் சாண்டாவ அவங்கவங்க ஏஞ்சல் கிட்ட சொல்லணும், எல்லோரும் ஹெச் ஆர் ஹாலுக்கு வாங்கன்னு ராதிகா அனெளன்ஸ் பண்ணாங்க. அடப் பாவிகளா. இன்னிக்கும் நிறைய கேம் வெச்சு என் ஏஞ்சல என்கேஜீடா வச்சிருக்கலாம் கடைசி நாளா இன்னிக்கு செமய்யாக் கலாய்க்கலாம்னு நெனச்ச என் நெனப்புல இப்பிடி மண்ணள்ளிப் போட்டாய்ங்களேன்னு நெனச்சிட்டே இருந்தப்போ, ..

பிரகாஷ் உள்ள வந்து செல்லோ டேப் இருக்குமா?ன்னு கேட்டாரு. கைல பாத்தா, ஏகப்பட்ட கிஃப்ட்ஸ். குடுங்க சார், நான் ஹெல்ப் பண்றேன்னு பண்ணேன். இதெல்லாம் யாருக்கு? உங்க ஏஞ்சலுக்கான்னேன். இல்ல என் சாண்டாவுக்குதான் அவ்வளவும்னாரு. வாவ். இவ்வளவான்னு எனக்கே சந்தோஷமா இருந்தது. இத்தனை நாளா இருந்த ஒரு ஃபன்னியா, கிண்டலா இருந்த என்னோட சந்தோஷம் அவர் எனக்காக வாங்கி வச்சிருந்த கிஃப்ட்ஸ்களை எல்லாம் பாத்தப்ப, மனசுக்குள்ள நிஜமாவே சந்தோஷமா நான் உணர்ந்தேன்.

எனக்கு வரப்போற கிஃப்ட்ட நானே செல்லோ டேப் போட்டு கவர் பண்றத, என் டிபார்ட்மெண்ட்ல இருக்குற அத்தனை பேரும் பாத்து நமட்டுச் சிரிப்பு சிரிச்சாங்க. ஒரு சூப்பரான க்ரீட்டிங் கார்டு. அதுல, ரஞ்சனி பேர எழுதிரட்டுமான்னு கேட்டாரு.. ஆ, வேணாம் வேணாம் னு உடனே கத்தினேன். நீங்க சீக்ரெட் சாண்டான்னே எழுதி, அவ கையில போய்க் குடுங்க . நீங்க கரெக்ட்டா கெஸ் பண்ணதப் பாத்து ஸ்டன்னாகி நின்னுருவாங்க ந்னு அவர அனுப்பி வச்சேன். ரஞ்சனி பேரப் போடுவாராமில்ல ரஞ்சனி பேர.
இன்னிக்கு லாஸ்ட் டே. இன்னிக்கு செமயா ஒரு கேம் விளையாடலாம்னு ப்ரிப்பேர்டா வந்தா, பத்து மணிக்கே எல்லாரும் ஹெச் ஆர் ஹால்ல வந்து சீக்ரெட் சாண்டா யாருன்னு ரிவீல் பண்ணனும்னு அனெளன்ஸ் பண்ணிட்டாங்க. எனக்கு இந்த கேம் முடியப் போகுதேன்னு கொஞ்சம் வருத்தமாவும் இருந்துச்சு, அதே சமயம், நான் தான் அவரோட சீக்ரெட் சாண்டான்னு தெரிஞ்சப்புறம் எப்படி ஃபீல் பண்றாருன்னு பாக்குறதுக்கு ரொம்ப ஈகராவும் இருந்தேன்.

பத்து மணிக்கு மேல எல்லாரும் ஹெச் ஆர் ஹால்ல அஸெம்பிள் ஆனோம்.

2012-12-29 10.16.54 edited

பிரகாஷ், ரஞ்சனிகிட்ட போய் நீதான் என் சாண்டா ன்னு சத்தியம் பண்ணி சண்டை போடாத குறைதான். மெதுவா அவர் முன்னாடி போய், ஹாய், ஐயம் யுவர் சீக்ரெட் சாண்ட்டான்னு சொன்னேன். அவரால நம்பவே முடியல. ஏன்னா, அந்த அளவுக்கு நான் அவர ட்ராக் மாத்த வைச்சு, ரஞ்சனி மேல டவுட் வர்ற மாதிரி செஞ்சிருந்தேன் வேணுமின்னே அவர மிஸ்கைடு பண்ணதுக்குக் கோவப்படுவாரோன்னு நெனச்சேன். நல்லவேளை அந்த மாதிரி எதுவும் நடக்கல.

சந்தோஷமா, அவர் கைல இருந்த கிஃப்ட்ஸ், சாக்லேட்ஸ் எல்லாத்தையும் எனக்குக் குடுத்தாரு. எல்லாரும் வந்து ரொம்ப ஜாலியா எங்ககிட்ட வந்து பேசி, நீங்கதான் நிஜமாவே சூப்பரா ப்ளே பண்ணுனீங்கன்னு அப்ரிசியேட் பண்ணாங்க.

என்னோட சீக்ரெட் சாண்டா யாருன்னு பாத்தா எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல. நான் யார்கிட்டப் போய் என் சாண்டா ரொம்பக் கஞ்சத்தனம் பிடிச்ச சாண்டான்னு கம்ப்ளைண்ட் பண்ணேனோ அந்த கிர்தர் தான் என்னோட சாண்டா. லீவப் போட்டுட்டு, பூஜாகிட்ட கிஃப்ட்ஸ் எல்லாத்தையும் குடுத்து என்கிட்ட குடுக்கச் சொல்லிட்டுப் போயிருக்கார்.

ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்திட்டு, அவரோட ப்ளேசுக்கே போய் உக்காந்து ஒவ்வொரு கிஃப்டா பிரிச்சிப் பாத்தேன். வாவ். நான் குடுத்த மாதிரியே எனக்கும் ஒரு ஃபோட்டோ ஃபிரேம்,குடுத்தாரு.ஒரு மேனிக்யூர் கிட் ஒன்ணு. ஏகப்பட்ட சாக்லேட்ஸ், குட்டியா லைஃப் பத்தி ஆர்ச்சீஸ் புக் ஓண்ணு.ஆனா ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.

இந்த சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் ஏஞ்சல் கேம் 2012 அ, மறக்கவே முடியாத வருஷமா மாத்திருச்சு.
சீக்ரெட் சாண்டாவிடம் பட்ட பாடுன்னு அவர் எழுதின டைட்டில் கூட நான் சொன்ன டைட்டில் தான். அந்தப் போஸ்ட்டப் படிச்சுப் படிச்சு எனக்கு ஒவ்வொரு இன்சிடெண்டும் கண்ணுக்குள்ளயே இருந்து சிரிச்சு சிரிச்சு முடியல.

எல்லா கிஃப்ட்ஸீம் கிஃப்ட் ரேப்பர் போட்டு வர்றதில்ல;குறிப்பா, கடவுள் எனக்குக் குடுத்துருக்கிற கிஃப்ட்டான சூப்பர்ப் ஃப்ரண்டு. 😉

Did you like this? Share it:

7 comments

  1. Deepika, You have narrated the experience in a nice way. If this piece of article is not edited by Prakash, then you can start your own blog and keep writing. Good flow.. Prakash is always good friend to all. You can learn a lot from him..

    1. hii jeyakumar.. this article is edited by prakash.. feeling happy & lucky 2 b his friend.. Yeah true learning so many things from him… he s really a down 2 earth person… :):)

  2. Hi miss.Deepika, the article was good, hope my mam’s as got a very good bulb 🙂 😀 but interesting to read the story.

Leave a Reply

Your email address will not be published.