அலுவலகத்தில் கிருஸ்துமஸை முன்னிட்டு, சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் ஏஞ்சல் கேம் நடத்தினார்கள்
குலுக்கிப் போட்ட சீட்டுகளில் இருந்து, எனது சீக்ரெட் ஏஞ்சலை செலக்ட் செய்தேன். சப்னா சோனம் என்று வந்திருந்தது.. ஆனால் இந்தக் கட்டுரை என் சீக்ரெட் ஏஞ்சலைப் பற்றியதல்ல.- சீக்ரெட் சாண்டாவைப் பற்றியது. என் பெயரை யார் தனது சீக்ரெட் ஏஞ்சலாக எடுத்திருப்பாரோ அவரே என் சீக்ரெட் சாண்டா.
அந்த வகையில் எனது சீக்ரெட் சாண்டாவிடமிருந்து ஒரு பிரிண்ட் அவுட் அட்டெண்டர் மூலமாக வந்திருந்தது. அதில்
சாண்டா க்ளாஸ் படம் இருந்தது. ”என்னாது இது படமெல்லாம் வரைஞ்சிருக்காய்ங்க”ஆஹா! கெளம்பிட்டாய்ங்கய்யா கெளம்பிட்டாய்ங்க என்று நினைத்துக் கொண்டேன்.அதன் பின்புறம் திருப்பிப் பார்க்கச் சொல்லி, அதில் The more you smile, the more younger you look.So, keep smiling (Hoping to see you as a baby soon :)) என்று எழுதி இருந்தது. சந்தேகமே இல்லாமல் இது பெண் கையெழுத்துதான்.யாராக இருக்கும்? என யோசனை ஓடியது.
அடுத்த நாள், சாக்லேட் வடிவ பெரிய சைஸ் பேக்.சாக்லேட் பேப்பரைப் பிரித்தால், உள்ளே சாக்லேட்டுக்கு பதில் ஒரு பெரிய சைஸ் அழிரப்பர்.HR மானேஜர் சச்சின், என்னைக் கடந்து சென்று, தனது மேஜையின் மீதிருந்த அந்த கிஃப்ட்டை எடுத்துக் கையால் அமுக்கிப் பார்க்கையில் ”பிப்பிய்ய்ய்ங்” என்று சத்தம் வந்தது.அவரது சீக்ரெட் சாண்டா கொடுத்த பரிசு போல. கல்லுப்பட்டி சந்தையில் விற்கும் மூன்றரை ரூபாய் நாய் பொம்மை போல. அதை எடுத்துக் கொண்டு என்னைக் கடந்தவர், என் கையில் இருக்கும் அழி ரப்பரையும், சாக்லேட் பேப்பரையும் பார்த்தார். இருவரும் பேசாமலே பரிமாறிக் கொண்டோம் “ஒய் பிளட்? சேம் பிளட்” என்று.
கொஞ்ச நேரம் கழித்து இன்னும் ஒரு கடிதம் டியோ ஸ்ப்ரேயுடன்.
என்னை யாரென்று தெரிகிறதா? கண்டு பிடியுங்களேன் பார்க்கலாம் என்கிற சீட்டுடன்.
க்ளு: நான் உங்கள் ஹாலைச் சேர்ந்தவர் அல்ல. உங்களுக்கு வலப்புறம் இருக்கும் ஹாலில் அமர்ந்திருப்பேன்.
வலதுபக்க ஹாலில் ரயில்வே ரிசர்வேஷன் கவுண்ட்டரில் இருப்பது போல ஒரு இருபது இருபத்தைந்து பேர்கள் ஆண்களும் பெண்களுமாய்HR, R&D, QA, Human Health என்று எல்லா டிபார்ட்மெண்ட்களில் இருந்தும் இருக்கின்றனர்.. இதில் யார் எனது சீக்ரெட் சாண்டா என்று பார்த்தால், யார் முகத்திலும் எழுதி ஒட்டியிருக்கவில்லை. கூகுளிட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. இடது பக்க ஹாலில் ஐ.டி.துறை ஆட்கள் பெரும்பாலும் இருந்தனர்
அபார்ட்மெண்ட்களில் வந்து விழும் காலைப் பேப்பர்களாய் எனக்குக் கடிதங்கள் அட்டெண்டர்கள் மூலம் வந்து கொண்டே இருந்தன. வான் திசை தவிர மீதி எல்லாத் திசைகளிலும் இருந்தும் எனக்கு செய்திகளும், சாக்லேட்டுகளும் வந்த வண்ணம் இருந்தன. என்னைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே, ஒரே அட்டெண்டர் மூலம் கடிதச் சீட்டுகளும், பரிசுப் பொருள்களும் வராமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அட்டெண்டர்.
ஒருமுறை என்னிடம் வேலை செய்யும் அட்டெண்டரே ஒரு cake மற்றும் பரிசுப் பொருள் ஒன்றையும் கொண்டு வந்து கொடுக்கையில், யாரிடமிருந்தப்பா? என்று கேட்டேன். “தெரியல சார். நாலஞ்சு கை மாறி வந்திருக்கு சார்” என்று என்னை வியப்பலாழ்த்தினான். ”கொடுமை கொடுமை எனக் கோவிலுக்குப் போனால், அங்கேயும் ஒரு கொடுமை திங்கு திங்குன்னு ஆடிக்கொண்டு….” என்பதாய் ”சரி வேலையப் பார்ப்போம் என்று மெயிலைப் பார்த்தால்” ஒரு புது மெயில் ஐடியில் இருந்து மெயில் வந்திருந்தது. என் சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் சாண்டா என்கிற பெயரில் எனக்கென ஒரு புதிய ஐடியை ஜிமெயிலில் உருவாக்கி, என்னிடம் உரையாடல். ”என்ன? இன்னும் என்னைக் கண்டுபிடிக்க வில்லையா?” என்று எகத்தாளமாக ஒரு கேள்வியுடன்.
சாண்டா , நீ மட்டும் என் கையில கிடைச்சேன்னா, நீ ஆயிடுவ
போண்டா என்று தாடி முளைக்காத டி.ராஜேந்தர் ஆனேன்.
இந்தப் பன்முனைத் தாக்குதலால் கொஞ்சம் திகிலடைந்து, ”என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை?” என்று சிந்தனையில் ஆழ்ந்தேன்.இந்தக் கம்பெனிக்கு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. இன்னும் யாருடனும் ரொம்பவும் நெருக்கமாக நட்பு பாராட்டி க்ளோஸ் ஆனதில்லையே. யாராக இருக்கும்? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
… இந்த சிங்கத்தை சீண்டிப் பார்க்கும் அந்தச் சிறு நரி யாராக இருக்கும் என்று யோசித்தேன்.எனது சிந்தனை டிரைசைக்கிள் முட்டு சந்தில் முட்டி நின்றதாய் உணர்ந்தேன்.
என் சாண்டாவிடமிருந்து அவ்வப்போது சீட்டுகள் யார் மூலமாகவாவது வர ஆரம்பித்தன. யாராவது என் பக்கம் கடந்து செல்கையில் அவர்கள் சீட்டுக் கொண்டு வருகிறார்களா என்று கவனிக்கும் அளவுக்கு நிலைமை சீரியஸாக ஆகி விட்டது 🙂
இன்னுமா என்னைக் கண்டுபிடிக்கலை? உங்கள் யூகத்தை எழுதவும்.
நாளை ஒயிட் அல்லது பேபி பிங்க் கலர் உடையணிந்து வரமுடியுமா? உங்களுக்கு அது மிக நன்றாக இருக்கும்.
இதெல்லாம் ரொம்ப ஓவரு. என்னா இது ரொம்ப ச்சின்னப் புள்ளத் தனமா இருக்குது என்று நினைத்துக் கொண்டேன்.
எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணனும் என்று நினைத்து, என் சாண்டாவிடம் ஏதாவது போட்டு வாங்கலாம் என்றெண்ணி,
நீங்கள் வேறென்ன மொழி பேசுவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு பதிலேதும் இல்லை.
வேறு ஏதாவது க்ளு ப்ளீஸ் என்றேன்.
ம்ஹீம்.
அடுத்த தூதுவன் கொடுத்த கடிதத்தில்
ஏதேனும் முக்கிய வேலையில் இருந்தால், பதினைந்து நிமிடங்களில் முடித்து விடவும். ஒரு முக்கியமான சஸ்பென்ஸ். அதை எனது அடுத்த கடிதத்தில் சொல்கிறேன். அது வரை காத்திருக்கவும்.என்ன சஸ்பென்ஸாக இருக்கும். இத்துடன் ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என்று ஏதாவது சுபம் போடப் போகிறாரா?
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே மூச்சு வாங்கிக் கொண்டு ஒரு அட்டெண்டர் ஒரு சீட்டைக் கொடுத்தார்.இரண்டு மாடிகள் ஏறி வந்திருக்கிறார் போல..
அடுத்த கடிதம்:
உங்களுக்கு ட்ரஷர் ஹண்ட் வைத்திருக்கிறேன்.நீங்கள் ரொம்ப இண்டலிஜெண்ட். சீக்கிரமே கண்டு பிடித்து விடுவீர்கள் என்று எழுதியிருந்தார்.இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்றீங்களே என்றெண்ணிக் கொண்டேன்
முகத்தைத் கோபமாக வைத்துக் கொள்ள 43 மஸில்கள் வேண்டும் ஆனால் பதினேழே ,மஸில்களைக் கொண்டு சிரிக்கலாம் என்பதால் சிரித்து வைத்தேன்.
க்ளு நெ.1: வாட்டர் ஃபில்டர் அருகே உள்ளது.
வாட்டர் ஃபில்டர் அருகே, ஃபில்டரின் மேலே, கீழே, நடுவே எல்லாப் பக்கங்களிலும், அதனருகே இருக்கும் மேஜையின் உள்ளே நன்றாகத் தேடிப்பார்த்தும் ஏதும் சிக்கவில்லை. ஒருவேளை மெஷினைப் பிரித்து உள்ளே பார்க்க வேண்டுமோ? ஸ்க்ரூ டிரைவர் எதுவும் கைவசமில்லையே..ஒருவேளை வாட்டர் ஃபில்டர் கம்பெனி பெயரில் ஏதேனும் க்ளு இருக்குமோ என்று அதை க்ளோசப்பில் பார்த்தேன்.
நான் தேடுவதைப் பார்த்து எனது உதவியாளர், “சார் நான் பாக்குறேன்” என்று எனக்கு ஒத்தாசை செய்ய வந்தார்.
நான் வந்து பதில் எழுதினேன். நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் புத்திசாலி அல்ல. எனக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ் மெண்ட்டல் வீக்” தயவு செய்து ட்ரஷர் ஹண்ட்டைக் கேன்சல் செய்யவும்.
சிறிது நேரத்தில், என் உதவியாளர்,சுருட்டப் பட்ட ஒரு சீட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். க்ளு நம்பர் 2. நம் கம்பெனியின் க்ராஃபிக் டிசைனரிடம் போய்க் கேட்கவும்.அந்தப் பக்கமாக வந்த தீபிகாவிடம் க்ளூ வந்து விட்டதென்றேன். தீபிகா, என் உதவியாளர் சகிதமாக ட்ரெஷர் ஹண்ட்டைத் தொடர்ந்தோம்.
இருப்பவர்களிலேயே சஞ்சீவ்தான் எங்கள் அலுவலகத்தின் சீனியர் க்ராஃபிக் டிசைனர். அவரிடம் போய்க் கேட்ட போது, அவரது மேஜைக்குள் இருந்து ஒரு கிஃப்ட் பார்சலும்,மற்றும் துண்டுச் சீட்டும் எடுத்துக் கொடுத்தார். துண்டுச் சீட்டில் அடுத்த க்ளு நெம்பர் 3.
இவர், உங்கள் ஹாலுக்கு வலதுபுற ஹாலில் அமர்ந்திருப்பவர். தமிழ்ப் பெண். N- ல் தொடங்கி A-வில் முடியும் இவர் பெயர். வலது புற ஹாலில் போய் யாருங்க என்று விசாரித்ததில், நதியா என்று தெரிந்தது. நதியா என்னை மேலும் கீழுமாய்ப் பார்த்தார். அந்தப் பார்வையில்… ”ஹீம். இதெல்லாம் ஒரு பொழப்பா?” தெரிந்தது.பின்னர் அவரது மேஜைக்குள்ளிருந்து, ஒரு சாக்லேட்டையும் அடுத்த க்ளுவையும் கொடுத்தார்.
க்ளு நம்பர் 4. ஒரு நாளில் மற்ற எல்லோரிடமும் விட, இவரிடம்தான் நீங்கள் அதிக நேரம் பேசுகிறீர்கள்.
சந்தேகமே இல்லாமல், எனது டைரக்ட் ரிப்போர்டீயான கிர்தர் சிங்தான். அவரிடம் போய்க் கேட்டேன். ஒரு கிஃப்ட் மற்றும் ஒரு சாக்லேட்.
அப்பாடா! நான்கு க்ளுக்களையும் கண்டு பிடித்து, பரிசுப் பொருள்களை என் இடத்திற்குக் கொண்டு வந்தேன்.எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?பவர் ஸ்டாரு மாதிரி முக்குக்கு முக்கு ஆள் செட்டப் பண்ணி உங்களுக்காக ஜே போட வைக்கிறீர்களே, நீங்க யாரு? எந்த ஊரு?
பதில் எழுதினேன். தங்கள் பரிசுகளுக்கு நன்றி. இன்னும் சில க்ளுக்கள் வேண்டும்.
நான் R&D யோ, biology தொடர்புடைய எந்தத் துறையையோ சேராதவள்.
அப்படியென்றால் ஹெச் ஆர் ரா? ரெகுலேட்டரி அஃபேர்ஸா?
இருக்கலாம். இப்படியாக, என் சாண்டாவிடமிருந்து எனக்கு க்ளு, ”வரும் ஆனா வராது” என்பதாக இருந்தது.
சிறிது நேரத்தில் தீபிகா வந்தார். கிஃப்ட்ஸ், சாக்லேட்ஸ் எல்லாவற்றையும் பார்த்து விட்டு,”சார், உங்க சீக்ரெட் சாண்டா ரியல்லி க்ரேட் சார். எவ்வளவு கிஃப்ட்ஸ் குடுத்துருக்காங்க… கலக்கீட்டாங்க உங்க சாண்டா என்று சிரித்தார்.
(இந்த ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பை கேக்குதா என்று யோசித்தேன்) எங்க ஹால் கோபி, அவரோட சாண்ட்டா யாருன்னு தெரிஞ்சவுடனே போட்டுத் தள்ளப் போறாராம். அவருக்கு இது வரைக்கும் ஒரு கிஃப்ட் கூட குடுக்கலாயாம்” என்றார். ஹேய், என் சாண்டா யாருன்னு, உங்களுக்குத் தெரியும் தான? சொல்லுங்க என்றேன்.
ஐயையோ, சொன்னா, அவ என்னயக் கொன்னேப் போட்ருவா.
சரி க்ளூவாவது குடுங்க. அவங்க ரெகுலேட்டரி டீமா?ஹெச் ஆரா?
நிச்சயம் சைன்ஸ் டிபார்ட்மெண்ட் சம்பந்தப் பட்டவங்க இல்லை.அவங்க பேரு சிங்கிள் பேரா இருக்கும். ரெண்டு பேரா வராது.
சிங்கம்தான் சிங்கிளா இருக்கும் என்று சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கார். சிங்கம் மாதிரி யாரு இருக்கா? எவா அவ? என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன்.கம்பெனியின் எக்ஸ்டென்ஷன் லிஸ்ட்டில் HR துறைப் பெண்களைப் பார்த்தேன்.
ராதிகா, ரஞ்சனி, ராக்கி
முதல் எழுத்து R-ல வரும்
சரி. கடைசி எழுத்து?
ம் அத நான் சொல்லவே மாட்டேன்.நல்லாக் கேக்குறீங்க பாருங்க டீட்டெய்லு.. நாளைக்கு நீங்களேத் தெரிஞ்சுக்குவீங்க. என்ற தீபிகாவை முறைத்தேன். இல்ல, அவ.. என்னைய… நான் என்ன சொல்ல வர்றேன்னா………
நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம் நானே போய்க் கண்டுபிடிச்சுக்குறேன்” நீங்க ஆணியே பிடுங்க வேணாம் என்று நினைத்துக் கொண்டு…
ராதிகாவிடம் போய், ஆர் யூ மை சீக்ரெட் சாண்ட்டா? என்றேன்.கையில் இருக்கும் கடிதங்களைப் பார்த்து விட்டு, WoW. These many messages you have got from your Santa? என்று வியப்பு மேலிட கண்களை விரித்தார். அந்தக் கண்களில் பொய் இல்லை. இதைக் கேட்டதும் எதிர்ப்புறம் அமர்ந்திருந்த ராக்கியும் பார்த்தார். Sir, You are so lucky, your Santa likes you so much என்றார். கண்டிப்பாக அது ராக்கியின் கையெழுத்தும் அல்ல.மீதி ரஞ்சனி ஒருவர் தான் என் சந்தேக வட்டத்தில்.ரஞ்சனி எங்கே என்று கேட்டேன்.
Ranjini is on leave today.
ஓ….மனதுக்குள் யோசித்தேன்…
எப்படி இது சாத்தியம்.? அலுவலகத்திற்கு வராமலேயே இது போல எல்லாம் செய்ய முடியுமா? ஏன் முடியாது? முதலிலேயே ப்ளான் பண்ணி, ஃபோன் மூலம் நண்பர்களைக் கொண்டு இதை செய்து முடித்தல் சாத்தியம் தான்.
மற்ற அல்லது ரெகுலேட்டரி டிபார்ட்மெண்ட்டில் இவ்வளவு மெனக்கிட்டு என்னை அலைய விடுவது மாதிரியான ஆட்கள் யாருமில்லாததால் என் சந்தேகமெல்லாம் ரஞ்சனி மீதே திரும்பியது.
மணி ஐந்தே கால் ஆன போது HR , regulatory பெண்கள் உட்பட அனைவரும் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டனர். எனக்கு சாண்டாவிடமிருந்து மெயில் வந்தது. ஓடிப் போய் ஹெச் ஆரில் யாராவது கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருக்கிறார்களா என்று பார்த்தேன் ஒருவருமில்லை.
மெயிலில், So, what colour is your shirt? என்று கேள்வி.
எனக்கு உடனே பொறி தட்டியது. பறி போன வடை கிடைத்த மாதிரி குதூகலம் வந்தது.
நம்மை டிரஸ் கோடில் வரச் சொன்ன ரஞ்சனி இன்று அலுவலகத்திற்கு வராததால் நான் என்ன உடை அணிந்திருக்கிறேன் என்று தெரியாத ஒரே ஆள் ரஞ்சனி மட்டுமே. மற்ற எல்லோரும் அன்று என்னைப் பார்த்தனர். நானும் இரண்டு மூன்று முறை மோப்ப நாயாக அடுத்த ஹாலுக்குள் போய் வந்து கொண்டே இருந்தேன். ஆர்வக் கோளாறால் இந்தக் கேள்வியைக் கேட்டு அவராகவே மாட்டிக் கொண்டு விட்டார். சாண்டா ச்சே என் சாண்டி யாரென்று கண்டு பிடித்து விட்ட திருப்தியில் It’s white Ranjini என்று பதிலளித்தேன்.அதற்கு எந்த ரீயாக்ஷனும் இல்லை.
கொஞ்ச நேரத்தில் ஃபேஸ்புக்கில் உங்களைப் பார்க்க முடியவில்லை. உங்கள் ஐடியைக் கூறவும்.
எனக்குள் யோசனை
என் ஃபேஸ்புக்கில் ரஞ்சனி,என் நண்பர்கள் லிஸ்டில் இருக்கிறார்.
ஒருவேளை தவறுதலாக டெலீட் செய்திருந்தால், இப்போது தேடுவதில் கிடைக்காமல் இருப்பேனோ என்று எண்ணிய படியே
I am Wrong. You are NOT Ranjini என்று பதிலிட்டேன். அதற்கும் ஒரு ரெஸ்பான்சும் இல்லை.
கிளம்பத் தயாராக இருந்த போது, அட்மினில் பணிபுரியும் சித்ரா வந்து ஒரு Munch சாக்லேட் கொடுத்தார். Your santa gave me this chocolate last evening and asked me to give it to you என்றார். நான் அவங்க யாருன்னு கண்டு பிடிச்சுட்டேன். நேத்திக்குக் கொடுத்திருக்காங்கன்னா, அவங்க இன்னிக்கு ஆஃபிசுக்கு வரல. இன்னிக்கு ஆஃபிசுக்கு வராத ஒரே ஆளு ரஞ்சனி மட்டும் தான் என்றேன். அவர் சிரித்த படியே பை சொன்னார்.
மறு நாள் காலை அலுவலகத்திற்கு வந்திருந்த போது, அலுவலக மொபைலை எடுத்துப் பார்த்தேன். முந்தின நாள் இரவே,அதில் ஒரு புதிய எண்ணில் இருந்து வந்த எஸ் எம் எஸ்… Thanks for coming in white dress..அந்த எண்ணிற்கு, என் பெர்சனல் ஃபோனில் இருந்து கால் செய்தேன்.யாரோ எடுத்தார்கள், நான் சந்தேகமாக,… ரஞ்சனி? என்றேன்.
Guess என்று வேண்டுமென்றே ரகுவரன் மாதிரி குரலை மாற்றிப் பேசி விட்டு, I will talk to you later. என பதில் வந்தது
No. You are not Ranjini, you conveyed Ranjini’s message to me என்றேன்.இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தீபிகாவின் குரல் போல இருந்தது. அவசரமாக, ஐ.டி துறை ஹாலுக்கு சென்று பார்த்தேன். தீபிகா இன்னும் வந்திருக்கவில்லை. சித்ராவின் கைப்பை மட்டும் அவரது மேஜை மேலே இருந்தது. சரி என்று ஒரு பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து பார்க்கையில், இருவரும் இருந்தனர். காலையில் வந்த செல் நம்பருக்கு எனது பெர்சனல் மொபைலில் இருந்து கால் செய்து, யாருடைய செல்லின் மணி அடிக்கிறது என்று பார்த்தால், தீபிகாவின் செல் ஒலித்தது. ஓஹோ. ரஞ்சனி, தீபிகாவிடம் அந்த எஸ் எம் எஸ் சை அனுப்பச் சொல்லி இருக்கலாம்.
நேரமாயிற்று.செல்லோடேப் கிடைக்காததால்,என் சீக்ரெட் சாண்டாவிற்காக நான் வாங்கிய பரிசுப் பொருள்களையும், ஒரு தேங்க்ஸ் க்ரீட்டிங் கார்டையும் எடுத்துக் கொண்டு ஐடி துறைக்கு சென்றேன்.
பரிசுப் பொருள்கள் எல்லாம் ஏற்கெனவே கிஃப்ட் பேக் செய்து வாங்கியிருந்தேன். வாங்கியிருந்த சாக்லேட்டுகளைஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பரிசுப்பொருள் மீது வைத்து செல்லோ டேப் போட்டு ஒட்ட அங்கு சென்று செல்லோ டேப் கேட்க , தீபிகா வந்து, சார், நான் செல்லோ டேப் போடுறேன் என்று உதவினார்.
தீபிகாவிடம்,க்ரீட்டிங் கார்டில் உள்ளே, ரஞ்சனி பெயரை எழுதி விடட்டுமா? என்றேன்.வேணாம் சார். சீக்ரெட் சாண்டான்னே போடுங்க. என்றார். நீங்க நேரா ரஞ்சனிட்ட போய், நீதான் என்னோட சீக்ரெட் சாண்டான்னு சொல்லி அவ கைல இந்த கிஃப்ட் எல்லாத்தையும் குடுத்துருங்க,நீங்க எப்படி கரெக்டா கெஸ் பண்ணீங்கன்னு அசந்து போய் ஸ்டன்னாகிருவாங்க என்றார்.
என்ன வச்சுக் காமெடி கீமடி எதுவும் பண்ணலயே? என்று குழம்பிக் கொண்டே, என்னிடத்திற்கு வந்து, ரஞ்சனியை இண்டர்காமில் அழைத்து, குட்மார்னிங் மை சீக்ரெட் சாண்டா என்றேன்.
No Sir. I am not your secret Santa.
Ok. Why do you say it is me?
See Ranjani, You were the only person who was absent yesterday in HR department. That’s why you mailed me asking what was the colour of your shirt? Since I frequented to HR department, everyone knew what colour shirt I wore.
Why should I ask you what was your shirt colour?
Because you asked me to come in a specific dress code.
No Sir.
Moreover, even after 5.20 pm, when everyone at HR left for home, you had internet access from your home and kept sending mails to me.
No sir. Anyhow, in a few minutes you will come to know who is your secret santa. Till then please wait.
என்னடா இது? தெளிவா குழப்புறாங்களே! தெளிய வச்சுத் தெளிய வச்சுக் குழப்புறாங்களே என்று குழம்பினேன்.
சரி என் குழப்பத்தைத் தீர்க்க, எனக்குத் தெரிந்த உண்மைகளை யோசித்து வரிசைப் படுத்தினேன்.
என் சீக்ரெட் சாண்ட்டா, எனக்கு வலப்புற ஹாலில் அமர்ந்திருப்பவர்.
R&D அல்லது Biology துறை சம்பந்தப் படாத துறை ஒன்றில் இருப்பவர்.
ஒற்றைப் பெயரில் (சர் நேம் இல்லாமல்) இருப்பவர்.
நேற்று நான் என்ன கலர் சட்டை போட்டிருந்தேன் என்று தெரியாதவர், அதை என்னிடம் மெயிலில் கேட்டவர்.
HR அல்லது Regulatory affairs துறையில் இருப்பவராக இருக்கலாம்.
HR இல் எல்லோரையும் ரூல் அவுட் செய்தாகி விட்டது. அந்தக் கையெழுத்து ராதிகாவினுடையதோ, ராக்கியுடையதோ அல்ல.
ENJOY MAADI என்று கடிதத்தில் எழுதியிருப்பவர் கன்னடத்துக் காரராக இருக்க வாய்ப்பு அதிகம்.
ரஞ்சனியும், ராக்கியும் கேரளத்துக் காரர்கள்.
ராதிகா பெங்களூர் வாசி.
இதில் சம்பந்தப் பட்ட வேறு துறை ஆட்களான தீபிகா தமிழ்நாட்டுக் காரர்.
சித்ரா பெங்களூர் வாசி.
ஐந்தரை மணிக்கு அலுவலகத்தில் அன்று வேறு யார் இருந்தார்? தீபிகா?ஆனால், தீபிகாவே, எனக்குக் க்ளுக்களைக் கொடுக்கிறார். ரஞ்சனிதான் என் சீக்ரெட் சாண்ட்டா என்று சொல்லாமல் சொல்கிறார்.மேலும், அவர் இருப்பது, வலப்பக்க ஹாலில் அல்ல-எனக்கு இடதுபுற ஹாலில். யோசித்துக் கொண்டிருக்கையில்..
ஹெச் ஆர் இலிருந்து அறிவித்தார்கள். அவரவர் சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் ஏஞ்சல்களை அவசரப் பட்டு சொல்லி விடாதீர்கள். சரியாக 10 மணிக்கு அனைவரும் எங்கள் ஹாலில் ஒன்று சேர்வோம். அப்போது ரகசியத்தை வெளிப்படுத்தவும் என்று.
10.05 க்கு அந்த ஹாலில் எங்கள் தளத்தில் இருக்கும் அனைவரும் ஆஜர். அனைவரது கைகளிலும் இரண்டு மூன்று பரிசுப் பொருள்கள். அவரவர் சீக்ரெட் ஏஞ்சலிடம் போய், நான் தான் உன் சீக்ரெட் சாண்ட்டா என்று சொல்லி வியப்பிலாழாழ்த்திக் கொண்டிருந்தார்கள். என் சாண்ட்டா யாரு யாரு என ரஞ்சனியிடம் கேட்ட போது, you never guessed her என்று சொல்லும்போதே , தீபிகா வந்து தன் கையில் இருந்த சாக்லேட், பரிசுப் பொருள்களை எனக்குக் கொடுத்துக் கொண்டே, ஐயாம் யுவர் சீக்ரெட் சாண்ட்டா என்றார். அடப்பாவி நீங்களா?
நான் கொண்டு சென்றிருந்த பரிசுப் பொருள்களை எல்லாம் தீபிகாவிடம் சந்தோஷமாகக் கொடுத்தேன்.
எப்பூடி என்றார்.
தீப்பூஊ…. வச்சிட்டீங்களே ஆப்பூஊ என்றேன்
😉
😉
இதன் நிறைவுப் பகுதி-தீபிகாவின் கோணத்திலிருந்து அவர் எழுதியது- நாளை வரும்… 🙂
The sadest part is we found out all my liking from face book and got me nice gift. But i didn get one also. 🙁 All becoz of deepika :@
Ranjini, “Vada Poche” wat 2 do ? 🙁
endha game la ur suppose 2 make ur angel happy but ours s a different case.. u ve made & making me feel so happier by d wonderful friendship of urs, the most precious gift i received for this new yr.. d one which i never expected would happen in tis game…. 🙂 so as said b4 ur promoted as ma santa 😉
Thanks Deepika 4 d wonderful game and an Unmatched (mis)guidance of clues. 😉
முதலில் உங்கள் கம்பெனியில் எனக்கு ஒரு வேலை தரவும்..அப்படியே தீபிகாவையே எனது சீக்ரெட் சாண்டாவாக நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் எனச் சொல்லவும். ( இது உங்கள் கம்பெனியில் வேலை கிடைக்கவில்லையென்றாலும் பொருந்தும்) சாக்லேட் எல்லாம் இல்லாமல் சாம்சங் எஸ்-3, ஆப்பிள் மொபைல் மாதிரி சிறு சிறு கிஃப்டுகளாக இருந்தாலே போதும் எனச் சொல்லவும். வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்ப முடியாது எனச் சொன்னால் எனது தங்கை உமா பெங்களூரில்தான் வசிக்கிறாள் அவளிடம் கொடுக்கச் சொல்லிவிடவும்.
நல்ல கம்பெனிதான்.. ஒரு புன்முறுவலுடன் படித்துக்கொண்டிருந்தேன்..அருமையான விவரனை..
ஜெயக்குமார், என்ன சின்னச் சின்ன விஷயங்களா கேக்குறீங்க, பெரிதினும் பெரிது கேள்னு சொல்றாங்க தீபிகா. 🙂
enna koduma sir edhu? 😉
Haaa 🙂 –> for Jay’s comments.
Well, Till Dec 2012 I was not aware of this game, suddenly my wife asked to purchase chocolates and cakes – in bulk quantity – I was surprised and understood that it’s for this “Santa-Game” in her office – It took almost many Hrs to understand the game rule.. Happy 4 Prakash ..
Thanks Ranga. 🙂 Chocolates, Gifts in BULK Quantity … ha ha , Now you got it after reading my post 🙂
Superrr Prakash…u r still keeping the tempo…..Myself and my husband enjoyed reading ….well done DEEPIKA….
Thanks Hans. Happy to know that you guys enjoyed my post. That tempts me to write our American college days’ Hawa Valley Trip, Thevankurichi trips
tnkss hannah 🙂
doctor! velai seithu kondu irukkirearkal endru parthal eppadi angel pidika kilambittinga pola erukuthu pola ullathe!
Chithappa 🙂 🙂
செம enjoyment அ இருந்திருக்கும்.