விடியற்காலை

புரண்டு படுத்ததால் பூமிப்பந்தின்
முதுகு பார்த்திருந்தவெளிச்சம்
இப்போது முகம் நோக்கி.

விழித்த உடனேயே அன்றைய இருத்தலை
உறுதி செய்து கொள்ளும் ஜீவராசிகள்.

மீண்டும் வெளிச்சக் கண்ணாடி
பொருத்திக்கொண்டஇருள் கண்கள்.

தான் மெளனமாகி,
பிற சப்தங்களை கடத்தும்காற்று.

பொய்கள் சுமக்கும் நாளிதழ்கள்
போலியான வெட்கத்தில் வீட்டு வாசலில்.

அன்றைய காலைக் கடனுக்கான
காத்திருப்பில் நாட்காட்டி.

உறக்கம் கலைந்த எரிச்சலில்
மனிதர்களை எழுப்பும் அலாரம்.

Did you like this? Share it:

7 comments

 1. Prakash.. keep going.. Good in presentation and fresh in thoughts. I like it and you have to come to the level to present yourself in rightway. Just keep it up and do it. JK

 2. புரண்டு படுத்ததால் பூமிப்பந்தின்
  முதுகு பார்த்திருந்தவெளிச்சம்
  இப்போது முகம் நோக்கி.

  Express Your attitude.

  Raji.S

 3. //விழித்த உடனேயே அன்றைய இருத்தலை
  உறுதி செய்து கொள்ளும் ஜீவராசிகள்.//

  நல்ல வரிகள் நன்பரே

 4. வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி சுப்ரமணியசாமி.

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *