ரகசியம்

மூன்றாம் நபருக்குத் தெரியக் கூடாதென்று
சத்தியம் வாங்கி சொல்லப்பட்டவைகளில் சில
நான்காம் நபரான என்னிடத்தில் ரகசியமாய்
காதருகே கைவைத்துப் பகிரப்பட்ட ரகசியம்
உள்ளங்கை நீராய்க் கசியும் மனத்துளைகளூடே
விஷயங்களுக்கு முளைக்கும் இறக்கைகள்-
அவை ரகசியமாகையில்
மூச்சாய்ச் சிறைப்படுபவை ஒரு பலவீன கணத்தில்
பெருமூச்சாய்த் தப்பித்து சுவாசிக்கும் சுதந்திரமாய்
முடிவற்றுத் தொடரும் சங்கிலியின் கண்ணிகளாய்-
ரகசியம் அறிந்தோர் எண்ணிக்கை
உங்களுக்குள் புதைப்பதற்கு மாறாய்
இன்னொருவர்க்குச் சொன்ன எதுவும்
ரகசியமல்ல சத்தம் குறைந்த செய்தி
என்றாலும் என்னிடமுண்டு சில ரகசியங்கள்
சிதையிலிருந்து விறைத்தெழும் என் மண்டையோட்டை
பலம் கொண்டடிக்கும் வெட்டியானுக்கும் வெளிப்படாமல்.

Did you like this? Share it:

3 comments

  1. ரகசியத்துக்கு பிறகு பேச விஷயமே இல்லியா?

  2. நிறைய இருக்கிறது.
    அலுவலக வேலையாய் புனே,பரோடா, அகமதாபாத்,லோனாவலா என்று நிறைய பயணங்கள்…
    ஒரு இண்டர்னேஷனல் கருத்தரங்கின் எக்ஸிபிஷனில் பங்கேற்பு… அதுதான் கொஞ்சம் தாமதம்.
    தொடர்ந்து பேசுகிறேன்…

  3. ஈ மெயில்ல எழுதரதையெல்லாம் பிண்ணூட்டத்துல எழுதுராங்கப்பா….

Leave a Reply

Your email address will not be published.