முரண் முதன்மைகள்

கோப்பை வென்று, நாடு திரும்பும் வீரர்கள்-
ஆயிரம் பூக்கள் மனிதக் கூட்டங்களுடன்.
அடுத்த விமானம்.
எல்லையில் உயிர்நீத்த
வீரனின் சவப்பெட்டி-
வாடிய ஒற்றை ரோஜா தனிமையில்.

Did you like this? Share it:

3 comments

  1. பிரகாஷ், தாங்கலை. மனிதாபிமானம், நாட்டுப்பற்று, இந்திய நாட்டின் அவல நிலை, இன்றைய நிலையில் நாட்டின் சீரழிவு போன்ற ‘உணர்ச்சி’ பொங்கும் கவிதைகள் எழுவதையெல்லாம் விட்டுவிடவும். இல்லையென்றால், நான் உங்கள் கவிதைகளைப் படிப்பதை விட்டுவிடுவேன். 🙂 வாரமலருக்கு அனுப்பினால் ஆயிரம் ரூபாய் சன்மானத்துடன் பிரசுரிப்பார்கள் என நினைக்கிறேன்.

  2. நாமிரூக்கும் நாட்டின் நிலை இது.

  3. பிரசன்னா,
    மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    துவக்க நிலை சோதனை முயற்சிகள் இவை.
    உங்களைப் போன்ற மாபெரும் (படைப்பாளி) வாசகரை இழக்க யாருக்குதான் மனம் வரும்?

Leave a Reply to ஹரன்பிரசன்னா Cancel reply

Your email address will not be published.