காத்திருத்தல்

பிரக்ஞயாய் வெளிப்படும் தகித்த பெருமூச்சு
குழப்பத்தில் தொங்கியபடி சிறகொடிந்த எண்ணங்கள்
எப்போதோ இழந்துவிட்ட வாய்
ஏளனமாய் வெறிக்கும் வெளி
சலித்துப் போன உணர்வு
என்னையே தின்னத் துவங்க,
கடைசி விள்ளலை விழுங்கும் முன்பாவது வருவாயா?

Did you like this? Share it:

3 comments

 1. //பிரக்ஞயாய்//

  ஸ்பெல்லிங் சரிதானா ப்ரகாஷ்??

  //கடைசி விள்ளலை விழுங்கும் முன்பாவது வருவாயா?//

  அவ்வளவு நேரம் ஏன் காத்திருக்கணும்???

 2. தவறு என்று தெரியும்.
  கை,வை களில் போட்ட கொம்பு
  எந்தக் கீ யை அழுத்தினால் மேற்கூறிய பதத்தில் வரும் என்பது தெரியாததால் வந்த பிழை அது.
  தெரிந்தால் சொல்லவும்.
  உதவிக்கு முன்னமே நன்றி.

 3. //தவறு என்று தெரியும்.
  கை,வை களில் போட்ட கொம்பு
  எந்தக் கீ யை அழுத்தினால் மேற்கூறிய பதத்தில் வரும் என்பது தெரியாததால் வந்த பிழை அது.
  தெரிந்தால் சொல்லவும்.
  உதவிக்கு முன்னமே நன்றி.//

  பிரக்ஞையாய்..ஞை (njai)

  ai எந்த மெய் எழுத்துடனும் இதை சேர்த்தால் ஐ காரம் வரும்..

  ஜெயக்குமார்

Leave a Reply to ஜெயக்குமார் Cancel reply

Your email address will not be published.